• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதவி இயக்குநருடன் நடிகைக்கு நிச்சயதார்த்தம்! - வைரலாகும் புகைப்படம்

உதவி இயக்குநருடன் நடிகைக்கு நிச்சயதார்த்தம்! - வைரலாகும் புகைப்படம்

நடிகை மிருதுளா முரளி

நடிகை மிருதுளா முரளி

  • Share this:
நடிகை மிருதுளா ரவி உதவி இயக்குநர் நிதின் மாலினி விஜய் திருமண நிச்சயதார்த்தம் நேற்று எளிமையாக நடந்தது.

மலையாளத்தில் ரெட் சில்லீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகை மிருதுளா முரளி. பின்னர் தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த மிருதுளா, ஃபகத் பாசிலுடம் அயாள் நிஜனல்ல என்ற படத்திலும் இந்தியில் ரத்தேஷ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இவரும் இயக்குநர் நிதின் மாலினி விஜய் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கொச்சியில் உள்ள ரெசாட் ஒன்றில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் இருவீட்டாரின் குடும்பத்தினரும், நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: படங்களில் நடிக்காதது ஏன்? - நடிகை சோனா விளக்கம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: