ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

”வாம்மா மின்னல்” கேரக்டர் தீபாவுக்கு திருமணம் - (போட்டோஸ்)

”வாம்மா மின்னல்” கேரக்டர் தீபாவுக்கு திருமணம் - (போட்டோஸ்)

நடிகை மின்னல் தீபா

நடிகை மின்னல் தீபா

நடிகை மின்னல் தீபா தனது திருமண புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சூர்ய பிரகாஷ் இயக்கத்தில் சரத்குமார், வடிவேலு, கோவை சரளா, மீனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானபடம் ‘மாயி’. அந்தப் படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் நகைச்சுவைக் காட்சியை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்தக் காட்சியில் மின்னல் போல் வந்து சென்றிருப்பார் நடிகை தீபா.

  மாயி படத்தில் நடித்ததை அடுத்து திரைத்துறையினரால் மின்னல் தீபா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் நடிகை மின்னல் தீபா தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் மின்னல் தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
   
  View this post on Instagram
   

  😍😀😀😀😀😀😀💞 please I need all my friends and fans blessing thank u💞


  A post shared by deepa (@minnaldeepa) on  அவரை பின் தொடரும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Vadivelu, Sarathkumar