முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்புவுடன் பைக்கில் சென்ற தனுஷ் பட நடிகை - வெளியானது புகைப்படம்

சிம்புவுடன் பைக்கில் சென்ற தனுஷ் பட நடிகை - வெளியானது புகைப்படம்

நடிகர் சிம்பு மற்றும் மேகா ஆகாஷ்

நடிகர் சிம்பு மற்றும் மேகா ஆகாஷ்

சிம்புவுக்கு ஜோடியான நடிகை மேகா ஆகாஷ், அவருடன் பைக்கில் செல்லும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Last Updated :

சிம்புவுக்கு ஜோடியான நடிகை மேகா ஆகாஷ், அவருடன் பைக்கில் செல்லும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த `அத்திரண்டிகி தாரேதி’ என்ற படம் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்க நடிகர் சிம்பு நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகி மேகா ஆகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் லைட் கேமரா, ஆக்‌ஷன் என்றும் ட்வீட் செய்துள்ளார். எனவே இந்த புகைப்படம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக நடிகர் தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து முடித்துள்ள இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் நடித்திருக்கிறார்.

First published:

Tags: Dhanush, Megha akash, Simbu