Home /News /entertainment /

ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய மீரா மிதுன்...!

ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய மீரா மிதுன்...!

Youtube Video

  • News18
  • Last Updated :
    ரமணா படத்தில் லஞ்சத்திற்கு எதிராக ஆன்டி கரப்ஷன் போர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி விஜயகாந்த் செயல்படுவதுபோல், நடிகை மீரா மிதுன், ஆன்டி கரப்ஷன் கமிஷன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பில் இணைந்துள்ளார்.

    ரமணா படத்தில் லஞ்சத்திற்கு எதிராக ஏசிஎஃப் என்ற அமைப்பை தொடங்கி விஜயகாந்த் போராடுவதுபோல், லஞ்சத்திற்கு எதிராக மீரா மிதுன் ஏசிசி என்ற அமைப்பில் இணைந்துள்ளார்.

    சமீபத்தில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மீரா மிதுன், போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் மீது வழக்கு போடுவதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    இதன் பிறகு பேட்டி கொடுத்த ஓட்டல் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதாக ஓட்டல் ஊழியர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சிபிஐ லோகோவை கொஞ்சம் மாற்றி, ஆன்டி கரப்ஷன் கமிஷன் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின், தமிழக இயக்குநராக மீரா மிதுன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டு, கமல் ஹாசன் பாணியில் இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கூறியிருந்தார்.



     

    மீரா மிதுனின் டிவிட்டை அடுத்து நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், அவர் அதற்கும் தனது பாணியிலேயே பதில் சொல்லியுள்ளார்.

    மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்பவர்கள், அசிங்கமாக திட்டுவதாகவும், அப்படி செய்பவர்கள் யார் என கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க உள்ளதாகவும் மீரா மிரட்டியுள்ளார்.

    மக்களுக்காக உழைப்பேன் என்றும் தன்னால் முடிந்த அளவு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும் அந்த வீடியோவில் மீரா தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டை விட்டே செல்வதாக ஏற்கெனவே கூறியிருந்த மீரா மிதுன், ஆன்டி கரப்ஷன் கமிஷன் சார்பில் சென்னையில் போஸ்டிங் கிடைத்துவிட்டதால் இங்குதான் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.

    மீரா மிதுனின் ஒவ்வொரு செயலையும் நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்தாலும், கொஞ்சமும் வலிக்காததுபோல் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடன் அவர் செய்யும் செயல்கள் நெட்டிசன்களையே டயர்டாக்கி உள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actress Meera Mithun

    அடுத்த செய்தி