நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

நடிகை மீரா மிதுன்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  நடிகை மீரா மிதுன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

  விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

  Also Read: பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்றவருக்கு நேர்ந்த சோகம் – வீடியோ!

  இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

  கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் நாளை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மீரா மிதுன் கூறியிருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Arun
  First published: