திரைத்துறையில் மிகப்பெரிய மைல்கல் - ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை மீனா!

நடிகை மீனா

90-களின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மீனா பல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல பிளாக்பஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் அவருக்கே ஜோடியாகுமளவிற்கு வளர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் 1976-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தார். 90-களின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மீனா பல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல பிளாக்பஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் 1981-ம் ஆண்டில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்த நடிகர் சிவாஜி கணேசனின் "நெஞ்சங்கள்" திரைப்படமாகும்.

90-களின் துவக்கத்தில் இருந்து சுமார்15 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். நடிகை மீனாவிற்கு கண்ணழகி என்ற செல்லப்பெயரும் உண்டு. நாம் யாருக்காகவும் காத்திருக்கலாம், நமக்காக யாரும் காத்திருக்க கூடாது என்ற தனது பாலிசி கூட தன வெற்றிப்பயணத்திற்கான காரணமாக நடிகை மீனா கூறி உள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து மீனா நடித்துள்ள "த்ரிஷ்யம் 2" மற்றொரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், தற்போது அதே படத்தின் தெலுங்கு வெர்ஷனின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் நடிகை மீனா.

Also read... தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படமும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தனது 5 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் 45 வயதாகியும் இன்னும் இன்று பீல்டில் இருக்கும் இளைய நடிகைகளை போல இளமையாகவே தோற்றமளிக்கும் நடிகை மீனா, திரைத்துறையில் நம்ப முடியாத வகையில் தனது 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். குழந்தை கலைஞராக தொடங்கிய இவரது திரைப்பயணம் ரசிகர்களின் ஆதரவுடன் இன்னும் முழு வீச்சில் தொடர்கிறது. தனது திரைப்பயணம் துவங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவு கூறும் வகையில் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார் நடிகை மீனா. 
View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)


திரைவாழ்க்கையில் 40 ஆண்டுகள் என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மீனா இது தொடர்பாக சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டா பதிவில், "1981 ஆம் ஆண்டில், லெஜண்ட் # சிவாஜி அப்பாவால் ஒரு குழந்தை கலைஞராக அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் முன்னணி பெண்மணியாக நடித்து, கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் எனது சொந்த அடையாளத்தை உருவாக்கி உள்ளேன்.வாழ்க்கையில் ஆசீர்வாதத்திற்கு குறைவே இல்லை. என்னை நம்பி, செழிப்பான அழகான வாழ்க்கையை செதுக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கிய மக்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனது திறமையை அங்கீகரித்து, எனது கடின உழைப்பைப் பாராட்டியதற்கு நன்றி, நன்றி, நன்றி"என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: