நடிகையின் மகனை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய 8 பேர் கொண்ட கும்பல்
நடிகையின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரிப்படம்
- News18 Tamil
- Last Updated: May 28, 2020, 9:31 PM IST
தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாயா. இவரது மகன் விக்கி என்ற விக்னேஷ்குமார் (39). இவர் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில் வசித்து வருகிறார். போதைக்கு அடிமையான இவர் இரண்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் இருக்கும் போது சுமார் 8 நபர்கள் வீட்டில் புகுந்து மது போதையில் விக்னேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விக்னேஷுகுமாரை அனுமதித்தனர்.
தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், குட்டி, சதீஷ்குமார், பெருமாள் உட்பட 8 பேர் இவரை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த வாரம் கஞ்சா மற்றும் மதுபோதையில் விக்னேஷ்குமார் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கவே கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த விக்னேஷ்குமாரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. விக்னேஷ்குமார் மீது வடபழனி மற்றும் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விக்னேஷ் இதுவரை புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் - பகீர் பாலியல் புகார் சொன்ன நடிகை
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் இருக்கும் போது சுமார் 8 நபர்கள் வீட்டில் புகுந்து மது போதையில் விக்னேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விக்னேஷுகுமாரை அனுமதித்தனர்.
தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், குட்டி, சதீஷ்குமார், பெருமாள் உட்பட 8 பேர் இவரை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த வாரம் கஞ்சா மற்றும் மதுபோதையில் விக்னேஷ்குமார் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கவே கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த விக்னேஷ்குமாரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் - பகீர் பாலியல் புகார் சொன்ன நடிகை