ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சசிகுமாருக்கு ஜோடியாகிறார் பிரேமம் பட நாயகி

சசிகுமாருக்கு ஜோடியாகிறார் பிரேமம் பட நாயகி

சசிகுமர் மற்றும் மடோனா செபஸ்டியன்

சசிகுமர் மற்றும் மடோனா செபஸ்டியன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படத்தில் நடிப்பதற்காக நடிகை மடோனா செபஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளார்.

’சுந்தரபாண்டியன்’, ‘குற்றம் 23’  போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவரது இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் சுந்தரபாண்டியன்.  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழில் கவண், பவர் பாண்டி, காதலும் கடந்து போகும், ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள மடோனா செபஸ்டியன் தற்போது முதல் முறையாக சசிக்குமாருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் 3-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பை காரைக்குடி, தென்காசி மற்றும் பொள்ளாச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Actor Sasikumar, Actress Madonna Sebastian, Director s r prabakaran, Kombu vacha singam movie