லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார்!

நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார். அவருக்கு வயது 97.

லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார்!
தனது தந்தையுடன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: November 9, 2018, 7:09 PM IST
  • Share this:
நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார். அவருக்கு வயது 97.

நான் மகான் அல்ல, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முன்னதாக ஆரோகணம், அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

அவரது தந்தை காலமான செய்தியை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது தந்தை இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் 97 வயதுடைய ஜெண்டில்மேன். அவர் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் தனது வாழ்க்கையை பயனுள்ளதாக முழுமையாக வாழ்ந்து முடித்துவிட்டார். இந்த நேரத்தில் நாங்கள் சோகம் அனுசரிக்கவில்லை. அவரது வாழ்க்கையை கொண்டாடுகிறோம்” என்று கூறியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: November 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading