தொடர் கொலை மிரட்டல்: லஷ்மி ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார்

என்னை அசிங்கப்படுத்துவதற்க்காக என் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், என் நடிப்பு தொழில் பற்றியும் கேவலமாக பொது வெளியில் பேசியும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருகின்றனர் என்று லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தொடர் கொலை மிரட்டல்: லஷ்மி ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார்
லஷ்மி ராமகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: October 16, 2018, 7:50 PM IST
  • Share this:
தனக்கு தொடர்ச்சியாக போன் வழியாகவும், நேரடியாகவும் சிலர் மிரட்டல் கொடுத்து வருவதால் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று இயக்குனரும் நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ளது பிரிஸ்டீஜ் வில்லா விஸ்தா அப்பார்ட்மெண்ட். இதில் சுமார் 1300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. இதில் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன் வாசித்து வருகிறார். இந்நிலையில் சிலர் போலியான அசோசியேஷன் ஏற்படுத்தி மோசடி செய்கிறார்கள் எனவும் இதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக என்னை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார்கள் என லஷ்மி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் இணை ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது "எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்துவருகிறார்கள். இதற்கு பின்னனியில் ஒரு முக்கிய புள்ளி இருந்து வருகிறார். இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து கேள்வி கேட்டதற்கு தொடர்ச்சியாக போன் வழியாகவும், நேரடியாகவும் மிரட்டி மன ரீதியான பிரச்னைகளை கொடுத்து வருகின்றனர்.

என்னை அசிங்கப்படுத்துவதற்காக என் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், என் நடிப்பு தொழில் பற்றியும் கேவலமாக பொது வெளியில் பேசியும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருகின்றனர். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இணை ஆணையரை சந்தித்து புகார் கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது சமூக வலைதளங்களில் #me_too என்ற இயக்கம் ட்ரெண்டு ஆகி வருகிறது. இதனால் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்னைகள் குறித்து தைரியமாக பேசி வருகிறார்கள். தனக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்னை குறித்து பொது வெளியில் பேசுவதற்கு பெண்களுக்கு அசாத்திய தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். தற்போது பெண்கள் மீடியாவில் கோலோச்சுவதால் இது நிகழ்ந்து வருகிறது. இந்த பிரச்னையை மக்களுக்கு எளிதாக எடுத்து சென்ற மீடியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading