• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரூ.90 லட்சம் மோசடி - நடிகை குட்டி பத்மினி போலீசில் புகார்

ரூ.90 லட்சம் மோசடி - நடிகை குட்டி பத்மினி போலீசில் புகார்

நடிகை குட்டி பத்மினி

நடிகை குட்டி பத்மினி

ஏராளமான மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை குத்தகைக்கு எடுத்து பணிகளைத் தொடங்கினேன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரூ.90 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக நடிகை குட்டி பத்மினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகை குட்டி பத்மினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் கிரீடா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். இதில் நிர்வாக இயக்குநராக சந்தோஷ் கோபி, சண்முககுமார் இருந்தனர். ஏராளமான மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை குத்தகைக்கு எடுத்து பணிகளைத் தொடங்கினேன்.

    இந்நிலையில் சந்தோஷ் கோபி, சண்முககுமார் என்னை மோசடி செய்துவிட்டனர். எனக்குத் தெரியாமல் வேறொரு கம்பெனியைத் தொடங்கியிருக்கின்றனர். எனது கம்பெனிக்கு வரும் காசோலைகளையும் வேறு கம்பெனி பெயரில் பணமாக மாற்றியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கம்பெனி நஷ்டமடைந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள்.

    பின்னர் விசாரித்ததில் இருவரும் என்னை ஏமாற்றி ரூ.90 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.

    வீடியோ பார்க்க: தயாரிப்பாளர் சங்கத்தை ஏற்றது தமிழக அரசு! பின்னணி என்ன?






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: