ரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த புது முயற்சி

news18
Updated: April 28, 2018, 4:09 PM IST
ரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த புது முயற்சி
கீர்த்தி சுரேஷ் - நடிகை
news18
Updated: April 28, 2018, 4:09 PM IST
ரசிகர்கள் தன்னைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக இணையதள பக்கம் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கியுள்ளார்.

நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்துள்ள கீர்த்திசுரேஷ் தற்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்திலும், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பைரவா படத்தில் விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து தளபதி 62 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக https://www.keerthysuresh4us.com/ என்ற இணையதள பக்கத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கியுள்ளார் . இந்த வலைதள பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அதில் உள்ள புகைப்படங்கள், பாடல் காட்சிகள், பேட்டிகள் என எல்லாமே தனித்தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டு, ரசிகர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்