பாஜக தொழிலதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் தரப்பு பதில்..!

நடிகை கீர்த்தி சுரேஷ்

திருமண ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக வந்த செய்தியை கீர்த்தி சுரேஷ் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

 • Share this:
  தொழிலதிபரை திருமணம் செய்யவிருப்பதாக வெளியான தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

  தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிக்கு சகோதரியாக ”அண்ணாத்த” படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் ரங் தே, மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இதனிடையே கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கீர்த்தி சுரேஷுக்கும், பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதை கீர்த்தி சுரேஷ் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

  எப்போதுமே திருமணமாகாமல் இருக்கும் திரைத்துறை பிரபலங்களை திருமண வதந்தி சுற்றி வருவதும், ஒரு சிலர் அதற்கு பதிலளிப்பதும், ஒரு சிலர் கண்டும் காணாமல் கடந்து செல்வதும் வழக்கமான ஒன்றுதான்.

  மேலும் படிக்க: இணையத்தில் டிரெண்டாகும் கொரோனா நெயில் ஆர்ட்..!
  Published by:Sheik Hanifah
  First published: