ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார், இதன் வசனங்களை சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார். இப்படமானது சுமார் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில், சென்னை, ஹைதராபாத் மற்றும் பிற இடங்களில் படமாக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் ராம் சரண், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
RC15 திரைப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், ரகுமான், அஞ்சலி, சுனில் மற்றும் நவீன் சந்திரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் முதல்முறையாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.
பான் - இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை Zee நெட்வொர்க் 200 கோடிகளுக்கு விலை பேசியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த வியாபாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : கோட் சூட்டில் கலக்கும் சாணி காயிதம் நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்
இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தில் அவர் நடிக்கும் இரட்டை வேடங்களில் ஒன்றிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட 'சர்காரு வாரி பாட்டா' பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் ரீல்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் இப்படத்தில் தென் கொரிய நடிகை சூபே ஜி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Also Read : 2023 பொங்கலில் பிரபாஸுடன் மோதும் விஜய்
இத்திரைப்படமானது 2023 ஆண்டு சங்கராந்தி (பொங்கல்) அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்த பின் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.