புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த நடிகை காவ்யா சாஸ்திரி!

காவ்யா சாஸ்திரி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது தலை முடியை தானம் செய்துள்ளார் நடிகை காவ்யா சாஸ்திரி.

  • Share this:
திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தாங்கள் வாழும் சமூகத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இதற்கு சின்னத்திரை பிரபலங்களும் விதிவிலக்கில்லை. சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரத்தில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரித்து உதவினர்.

இப்படி பல சின்னத்திரை பிரபலங்கள் சத்தமின்றி சமூகத்திற்கு தேவையான பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னட பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரை கலைஞருமான பிரபல சீரியல் நடிகை காவ்யா சாஸ்திரி, தனது நீளமான கூந்தலை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் செய்து உள்ளார். தலைமுடி பராமரிப்பில் அக்கறை உள்ளவராக அறியப்படும் நடிகை காவ்யா சாஸ்திரி புற்றுநோயாளிகளுக்கு உதவ தனது பாதிக்கும் மேற்பட்ட கூந்தலை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை காவ்யா சாஸ்திரி கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சன் டிவி-யில் ஒளிபரப்பான மகாலட்சுமி சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை காவ்யா சாஸ்திரி. இவர் நந்தினி சீரியலிலும் நடித்துள்ளார். கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதால் குறிப்பாக இவர் கன்னட திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். கன்னட திரைப்படமான யுகாவில் அறிமுகமான இவர், நன்கு அறியப்பட்ட கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான சுபாவிவாஹா, ராணிவாசம் உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார். இதனிடையே புற்றுநோயாளிகளுக்காக தான் கூந்தல் தியாகம் செய்துள்ளது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் ஃபோட்டோவையும் ஷேர் செய்துள்ள அவர், இந்த சேவையில் கை கோர்க்கும் படி ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also read : எங்க "அபி டெய்லர்" சீரியலுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. இன்ஸ்டாவில் பதிவிட்ட மதன் பாண்டியன்!

தனது அன்பான உறவினர் ஒருவரை கேன்சருக்கு பறி கொடுத்துள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ள நடிகை, கீமோ தெரபி மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் வேதனையை உன்னிப்பாகக் கண்ட பிறகு, புற்றுநோயாளிகளுக்கு தன் தலைமுடியை தானம் செய்ய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்த சிறிய அளவில் நான் புற்றுநோயாளிகளுக்கு உதவி உள்ளேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை காவ்யா சாஸ்திரி கூந்தல் தானம் செய்துள்ளது தொடர்பாக இன்ஸ்டாவில் தகவல் ஷேர் செய்துள்ள BANGALORE HAIR DONATION என்ற NGO அமைப்பு, புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆதரவாக காவ்யா சாஸ்திரி தன் தலைமுடியை வெட்டி கொண்டாள். ஒரு புற்றுநோய் நோயாளி நம்பிக்கையுடன் சமூகத்தை எதிர்கொள்ளும் வகையில் தன் தலைமுடியை தானம் செய்திருக்கிறார் காவ்யா சாஸ்திரி.

Photogallery: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது! நிஜத்தில் செம்ம மாடர்ன் லுக்கில் ரோஷினி ஹரிபிரியன்..

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தை நோயாளிகளுக்கு முடி உதிர்தல் என்பது மிக பெரிய மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. நீங்கள் தானம் செய்யும் தலைமுடி கேன்சர் நோயாளிகள் நம்பிக்கையுடன் சமூகத்தை எதிர்கொள்ளவும், முடி உதிர்தல் காரணமாக ஏற்படும் மனச்சோர்வை விரட்டவும் உதவும் என்று கூறி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: