• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிக் டோக்கை தடைசெய்வதா? - நடிகை கஸ்தூரி ஆவேசம்

டிக் டோக்கை தடைசெய்வதா? - நடிகை கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

  • News18
  • Last Updated :
  • Share this:
    டிக் டோக்கை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ள நடிகை கஸ்தூரி, அந்த ஆப் மூலம் பலருக்கு பட வாய்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    சலங்கைதுரை இயக்கத்தில் இபிகோ 302 என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், டிக் டோக் ஆப் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. தவறான செயல்களுக்குக் காரணமாக உள்ளது என்று கூறி அதைத் தடை செய்கிறார்கள். 800 ஆபாச வலைதளங்களைத் தடை செய்தபோது அதைக் கருத்து சுதந்திரம் என்று சண்டை போடுவோம். ஆனால் டிக் டோக் செயலியை மட்டும் தடை செய்வோமா?

    ஏனெனில் அந்த ஆபாச வலைத்தளங்களில் சன்னி லியோனும், பெயர் தெரியாத வெள்ளைக்காரப் பெண்களும் நடிக்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் நம் போனில் அதைப் பயன்படுத்துவதில்லை. அதனால் அது சரி. பக்கத்து வீட்டில் நடப்பதை ஓட்டை போட்டு நாம் பார்த்தல் அது சரி. ஆனால் என் பொண்ணு போனில் டிக் டோக் இருக்கக்கூடாது. அதுதானே பிரச்னை.

    டிக் டோக்கினால் பலர் சினிமாவில் வாய்ப்பு பெற்றுள்ளனர். டிக் டோக் மூலமாக திறமைகளை வெளியே கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். டிக் டோக் வழியாக கணிதப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட இருக்கிறார்கள். அதையெல்லாம் நாம் யாராவது பார்த்தோமா? மக்களுடைய இந்தப் பாசாங்கை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள கசக்கத்தான் செய்யும்” என்று கூறினார்.



    ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் டிக் டோக் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து, புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிக் டோக் ஆப்-ஐ தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து டிக் டோக் ஆப்-ஐ தயாரித்த சீன நிறுவனமான பைட்டி டான்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையே விசாரிக்கலாம்.

    ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இதுதொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்றால், டிக் டோக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தானாகவே ரத்தாகிவிடும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    வீடியோ பார்க்க: உங்கள யார் சினிமாவை வந்து பார்க்க சொன்னது? கஸ்தூரி ஆவேசம்






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: