• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'என்ன உன் அழகு ஜடாமுடி மீசை'... நித்திக்கு இத கண்டிப்பா கொடுக்கனும்- கஸ்தூரி

'என்ன உன் அழகு ஜடாமுடி மீசை'... நித்திக்கு இத கண்டிப்பா கொடுக்கனும்- கஸ்தூரி

கஸ்தூரி|நித்யானந்தா

கஸ்தூரி|நித்யானந்தா

  • News18
  • Last Updated :
  • Share this:
    நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

    நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து ‘பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 ’ என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ ஆல்பத்தில் நித்யானந்தாவின் பெருமைகளை அவரது பெண் சிஷ்யர்கள் ஆங்கிலத்தில் ரேப் வடிவத்தில் பாடியுள்ளனர். ஆங்காங்கே தமிழ் மொழியும் பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.



    "நமோ நமோ நித்யானந்தாய்... நமோ நமோ நித்யானந்தாய்
    ஓம் நமோ நித்யானந்தாய் சதாசிவாயாஹோ
    நித்யானந்த சதாசிவ மஹாதேவஸ்யே
    என்ன உன் அழகு ஜடாமுடி மீசை!"

    பாடலின் ஹைலைட் இந்த வரிகள் தான். இந்த பாடல் விடியோவைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் கஸ்தூரி,  "என்ன உன் அழகு ஜடாமுடி மீசை... இத்தனை வீரப் பாராக்கிரமங்களை உள்ளடக்கிய நித்யானந்தா கூடுதலாக விலங்குகளையும் அற்புதமாக தமிழ் பேச வைக்கிறாராமே இவருக்கெல்லாம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தந்தால் என்ன? " என்று பரிந்துரைக்கிறார் கஸ்தூரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: