Karthika Muraleedharan : உடல் எடையை குறைத்து ஃபோட்டோ வெளியிட்ட நடிகை கார்த்திகா முரளிதரன்!

நடிகை கார்த்திகா முரளிதரன்

பிரபல நடிகை கார்த்திகா முரளிதரன் தனக்கு நேர்ந்த பாடி ஷேமிங் குறித்தும் அதனை தான் எதிர்கொண்ட விதம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
பாடி ஷேமிங் (Body Shaming) எனப்படும் பருமனான உடல் கொண்டோரை கிண்டல் செய்வது என்பது காலங்காலமாக சமூகத்தில் இருக்கும் பிரச்சனை. ஆனால் அதுகுறித்து சமீபத்தில் தான் பலரும் மௌனம் கலைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் நித்யா மேனன், ஷமீரா ரெட்டி என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாடி ஷேமிங் சம்பவங்கள் குறித்து மனம் திறந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை கார்த்திகா முரளிதரன் தனக்கு நேர்ந்த பாடி ஷேமிங் குறித்தும் அதனை தான் எதிர்கொண்ட விதம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''நான் சின்ன வயதில் இருந்து உடல் பருமனாக இருந்தேன். ஆனால் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் அதனை உணரத் தொடங்கினேன்.

அதிலிருந்து நான் வளரும் வரை பலமுறை தொடர்ச்சியாக பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டேன். பள்ளி மட்டுமல்லாமல், குடும்பம், நண்பர்கள் எனத் தொடர்ந்ததால் நான் அதனை எதிர்க்கும் விதமாக நான் இன்னும் உடல் எடையை அதிகரிக்கத் துவங்கினேன். என்னை வெறுத்தேன். ஆனால் அது எனக்கு எதிராகவே முடிந்தது.

ALSO READ |  "கிரிக்கெட்டில் இவரு என் ஹீரோ" : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மனம் கவர்ந்த சிஎஸ்கே நாயகன்!

பின்னர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தேன். உடல் பருமனாக இருப்பது குறித்து விமர்சனங்களை அதிகம் எதிர்கொண்டேன். ஆனால் அது முன்பை விட, நான் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அது இருந்தது. நான் நானாக இருப்பதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாதது குறித்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றை செய்யத் தொடங்கினேன்.

ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. காரணம் நான் என் உடம்பை வெறுத்தேன். அதனால் நான் அதனை நிறுத்த விரும்பினேன். நான் என் உணவுமுறையை, உடல், என் மனம் என அனைத்தையும் மொத்தமாக சரி செய்ய நினைத்தேன். மேலும் என்னைப் பற்றி நான் விரும்பாத வார்த்தைகள் என அனைத்தையும் தவிர்க்க விரும்பினேன்.

ALSO READ |  முதல் படத்தில் குட்டி பையனாக யுவன் - லைக்ஸை குவிக்கும் படம்!

இதனையடுத்து நான் அடிகா வெல்னெஸ் ஸ்டுடியோவில் பயிற்சியாளர் நீலமின் மேற்பார்வையில் இணைந்தேன். அங்கு நான் இணைந்ததற்கு உடல் எடை குறைப்பது என்ற ஒன்று மட்டுமே காரணம். ஆனால் நான் உணவு எடுத்துக்கொள்ளும் முறை, என் உடலை நான் மதிக்கும் விதம் எல்லாமே மாறியது.

உங்கள் உடலையும் மனதையும் ஒழுங்காக பராமரித்தால் அது தடையில்லாத சக்தியை அது வழங்கும். இது தான் உடல் எடையை குறைத்த விதம் என்றார். இந்நிலையில் அவரது பதிவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ALSO READ |  'பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி' ஆதரவற்றோருக்கு உதவி வரும் நடிகை சரண்யா சுந்தர்ராஜ்!

நடிகை கார்த்திகா முரளிதரன், கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'காம்ரேட் இன் அமெரிக்கா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் அங்கிள் படத்தில் நடித்தார். கார்த்திகா பிரபல ஒளிப்பதிவாளர் சி.கே.முரளிதரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published: