• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிவி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெறும் ஹீரோயின்!

டிவி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெறும் ஹீரோயின்!

கரீனா கபூர்

கரீனா கபூர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரபல தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை கரீனா கபூர்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கரீனா கபூர் தனது மகன் தைமூர் பிறந்த பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஜீ டிவி நடத்தும் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சிக்கு நடுவராக தேர்வாகியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக சம்பளம் பெறும் பெண் நட்சத்திரமாகவும் மாறியுள்ளார்.

    இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அதற்கு பதிலளித்துள்ள கரீனா, நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண் நடுவருக்கு அதிகம் சம்பளம் கொடுக்கும் போது அதே சம்பளம் பெண் நடுவருக்கும் தரப்பட வேண்டும். எனது தகுதி மற்றும் நான் செய்யும் வேலைக்காகவே சம்பளம் பெறுகிறேன். கடந்த 5 வருடங்களாக பல தொலைக்காட்சிகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தாலும் டான்ஸ் இந்தியா டான்ஸுக்கு மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.




    வீடியோ பார்க்க: சூர்யா ஜெயித்த கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: