மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு தொடக்கம் முதலே பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். விவசாயிகள் போராட்டங்கள் குறித்து ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்றைக் குறிப்பிட்டு, சமீபத்தில் அவர் பகிர்ந்த கருத்து கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
போராட்டத்தில் பங்கேற்ற 80 வயதுள்ள ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்த கங்கனா ரனாவத், போராட்டத்திற்கு மூதாட்டியை 100 ரூபாய் கொடுத்து அழைத்து வந்துள்ளதாகவும் அவர் ஷாகின்பாக் போராட்டக்காரர் என்றும் கடுமையாக சாடினார்.
Also read: ரஜினியை விமர்சித்தால் பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும் - திரைப்பட இயக்குநர் காட்டம்
அந்தக் கருத்து சர்ச்சையான நிலையில், கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அந்த ட்விட்டர் பதிவை அவர் நீக்கினார். தற்போது விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகளின் பங்கு இருப்பதாகவும் அரசியல் தூண்டுதலால் அது நடைபெறுவதாகவும் மற்றுமொரு கருத்தைத் தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.