சிம்புவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

நடிகர் சிம்பு

கல்யாணி பிரியதர்ஷன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்தப் படத்தின் பூஜை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுவரை படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்திருந்தார். மேலும் படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Kalyani Priyadharshan

இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு நாடகம் அம்பலம் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: