சோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை காஜல் அகர்வால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.2007 ஆம் ஆண்டு பழநி படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், ஒரு சில படங்களிலே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

  2009 ஆம் ஆண்டு ராம் சரண், காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் மிகுந்த வெற்றி பெற்றது.பின்பு துப்பாக்கி, ஜில்லா, மாரி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடைப்பெற்றது.பின்பு இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  Photos : கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் நடிகை சாரா அலிகான்-போட்டோஸ்  இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை சோ க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  Photos : சேலையில் மிண்ணும் நடிகை ஓவியா-போட்டோஸ்

     தற்போது காஜல் அகர்வால் ஹே சினாமிகா, பாரிஸ் பாரிஸ், கருங்காப்பியம், கோஷ்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: