• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்ச்சைக் காட்சியில் காஜல் அகர்வால் - பாரிஸ் பாரிஸ் டீசரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சர்ச்சைக் காட்சியில் காஜல் அகர்வால் - பாரிஸ் பாரிஸ் டீசரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பாரிஸ் பாரிஸ் டீசரில் இடம்பெற்ற காட்சி

பாரிஸ் பாரிஸ் டீசரில் இடம்பெற்ற காட்சி

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் படத்தின் டீசர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் படத்தின் டீசர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இவர் நடிப்பில் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் பாரிஸ். கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் பாரிஸ் பாரிஸ்.

    இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா, கன்னட ரீமேக்கில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் சமீபத்தில் வெளியானது. அதில் காஜல் நடித்துள்ள தமிழ் டீசரில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், காஜல் அவரது தோழியுடன் தோன்றும் காட்சி ஆபாசமாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.



    இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் படத்தின் டீசர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில், டீசரின் இறுதியில் ஆபாசமான வசனங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.



    இந்தப் படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீர் என காஜலின் காதலன் திருமணத்தை நிறுத்துகிறார். பின்னர் தேன்னிலவுக்காக இருவரும் இணைந்து புக் செய்திருந்த பாரிஸ் நகருக்கு அவர் மட்டும் தனியாக செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை.



    விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவேன்... 6 வயது சிறுவன் சபதம் - வீடியோ


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: