• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜோதிகாவின் 50வது படமான ‘ உடன்பிறப்பே’ படத்தின் ட்ரைலர் வெளியானது..

ஜோதிகாவின் 50வது படமான ‘ உடன்பிறப்பே’ படத்தின் ட்ரைலர் வெளியானது..

ஜோதிகா

ஜோதிகா

ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ட்ரைலர் வெளியானது.

  • Share this:
    நடிகை ஜோதிகா 2000 த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய் - ஜோதிகா இணைந்து நடித்த குஷி திரைப்படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரெட் திரைப்படமாக உள்ளது. நடிகை ஜோதிகா சூர்யாவுடன் பேரழகன்,சில்லுனு ஒரு காதல், மாயாவி, காக்க காக்க இப்படி பல ஹிட் படங்கள் நடித்துள்ளார்.பின்பு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

    நீண்ட இடைவேளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். ஜோதிகா நடிக்க தொடங்கிய பின் அவருக்கான பட வாய்ப்புகள் வந்து குவிந்தனஎன்று தான் கூற வேண்டும். மகளிர் மட்டும் , நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், ஆகிய திரைப்படங்கள் வெளியானது. பொன்மகள் வந்தால் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படமாகும்.

    அதையடுத்து சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார், சூரி, கலையரசன், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இரா சரவணன் இயக்கத்தில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.


    இந்த திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: