Home /News /entertainment /

அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகரில் போட்டியா? ஜோதிகா பதில்

அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகரில் போட்டியா? ஜோதிகா பதில்

நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா

படத்தை விளம்பரத்தும் பணிகளில் பொன்மகள் வந்தாள் படக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா ஜூம் ஆப் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

    சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் ஆர்.பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப்போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் OTT தளத்தில் வெளியாகும் முதல்படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. அதன்படி வரும் 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

    படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா ஜூம் ஆப் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜோதிகவிடம், சமூக சேவை செய்து வரும் சிவகுமார் குடும்பத்திலிருந்து யாருமே அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த ஜோதிகா, அரசியலுக்கு வராமலேயே நல்லது பண்ணலாம். உண்மையில் அப்படித் தான் அதிகமாக மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கண்டிப்பாக தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அனைத்துக்கும் அரசையே நம்பி இருக்கக் கூடாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Jyothika

    அடுத்த செய்தி