முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "அண்ணியுடன் முதல் படம்... த்ரில் தான்..." - கார்த்தி

"அண்ணியுடன் முதல் படம்... த்ரில் தான்..." - கார்த்தி

ஜோதிகா | கார்த்தி

ஜோதிகா | கார்த்தி

  • Last Updated :

ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.

பாபநாசம் படத்தை அடுத்து த்ரிஷ்யம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக், ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர். படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். கார்த்தியின் அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

பாபநாசம் படத்தை அடுத்து ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஜோதிகாவுடன் நடிப்பது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், மிகச்சிறப்பான தருணம். கார்த்தியையும் ஜோதிகாவையும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

யார் கொலைகாரன்? விஜய் ஆண்டனி, அர்ஜூன் கலகல பேட்டி!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

top videos


    First published:

    Tags: Actor Karthi, Jyothika