• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போலீசுடன் மோதிய ஜூலியின் நண்பர்... அடிதடி சம்பவத்தால் பரபரப்பு!

போலீசுடன் மோதிய ஜூலியின் நண்பர்... அடிதடி சம்பவத்தால் பரபரப்பு!

நடிகை ஜூலி

நடிகை ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர் ஜீலி.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை ஜூலியின் நண்பரும், வேப்பேரி காவலர் ஒருவரும், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர் ஜீலி. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட இவர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் நிறுத்தும் இடத்தில், தனது ஆண் நண்பரான நடிகர் ரஜிதிப்ரானுடன்  காரை பின்பக்கமாக எடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது, சாதாரண உடையில் இருந்த வேப்பரி காவல் நிலைய காவலர் பூபதியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தான் காவலர் என்று தெரிவித்தும், நடிகை ஜீலி மற்றும் அவரது நண்பர் சேர்ந்து பிர்ச்னையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உதவிக்கு சில வழக்கறிஞர்களை நடிகர் ரஜிதிப்ரான் அழைத்துள்ளார்.

    வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, நடிகர் ரஜிதிப்ரான் காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். காவலர் பூபதியும் பதிலுக்கு இவர்களை தாக்கியுள்ளார். இதனையடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் நடிகர் ரஜிதிப்ரான் மற்றும் தாக்கிய வழக்கறிஞர்கள் ஆகியோரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிவில் இரு தரப்பும் சமரசமானதால் வழக்குப்பதியாமல் விடுவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    இந்த விவகாரம் குறித்து வேப்பேரி காவல் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூரத்தின் உச்சம் - சத்யராஜ் வேதனை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: