கன்னித்தீவு நிகழ்ச்சி எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளது- நடிகை ஜனனி நெகிழ்ச்சி

நடிகை ஜனனி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சிக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக நடிகை ஜனனி தெரிவித்துள்ளார்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய காமெடி ஷோவாக ‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’ நிகழ்ச்சி ஒளிப்பபாகி வருகிறது. இதில் அரசனாக பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், ராஜமாதாவாக சகீலா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பேபி மாதாவாக ஜாங்கிரி மதுமிதா வருகிறார். இவர்களுடன் அமுதவானன், அன்சார், திண்டுக்கல் சரவணன், அன்னா பாரதி, நர்மதா உள்ளிட்ட ஒரு காமெடி பட்டாளமே நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வாரம்தோறும் சிறப்பு அழைப்பாளராக ஒருவர் பங்கேற்று வருகிறார். அதில் இந்த வாரம் பிக்பாஸ் புகழ் நடிகை ஜனனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளார். ரோபோ சங்கருடன் ரொமான்ஸ் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் அவர், நிகழ்ச்சியின் ஒவ்வொரு செக்மெண்டையும் ரசித்து விளையாடியுள்ளார். ஜனனி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் புரோமோவையும் கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாக அவர் மெய் சிலிர்த்து கூறியுள்ளார்." தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இதுபோன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதனை கலர்ஸ் தமிழ் சேனல் ‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’ நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, நீண்ட நாள் ஆசையை போக்கியுள்ளது. நான் அங்கிருந்த அனைத்து நிமிடங்களையும் மிகவும் என்ஜாய் செய்தேன். மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இப்படியான ஒரு வாய்ப்பைக் கொடுத்த சேனல் நிர்வாகத்துக்கு என்னுடைய நன்றி. ஒவ்வொருவரும் நேச்சுரலான பர்ஃபாமென்சைக் கொடுத்தனர்" என புகழந்துள்ளார். சிறப்பு அழைப்பாளராக ஜனனி பங்கேற்ற இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.Also Read : இளமை திரும்புதே.. வைரலாகும் குஷ்புவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்

பிக்பாஸூக்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது பிஸ்னஸிலும் குதித்துள்ளார். அக்காவுடன் இணைந்து The Hazzle Avenue என்ற பேஷன் வெப்சைட் ஒன்றைத் தொடங்கிய அவர், அதில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த டிசைனர்களிடமிருந்து பிரத்யேக உடைகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் செய்து வரும் பிஸ்னஸூக்கு அவர்களே மாடலிங்கும் செய்து வருகின்றனர். விதவிதமான உடைகளில் பிரத்யேகமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிடும் அவர்கள், அதன் மூலம் கிடைக்கும் ஆர்டர்களுக்கு உடைகளை அனுப்புகின்றனர். தொழில்முனைவோராக மாறியிருக்கும் ஜனனிக்கு, சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Colors Tamil (@colorstvtamil)


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: