• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "மாற்றம் ஒன்றே மாறாதது" பெயரில் ஜாதியை நீக்கிய ஜனனி - குவியும் பாராட்டு!

"மாற்றம் ஒன்றே மாறாதது" பெயரில் ஜாதியை நீக்கிய ஜனனி - குவியும் பாராட்டு!

ஜனனி

ஜனனி

சமூகநீதியை குலைத்து, மனிதர்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்துவதின் அடையாளமாகவும் இருப்பதால், பெயருக்கு பின்னால் ஜாதியை போடக்கூடாது என தமிழக அரசியல் களம் கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தன்னுடைய பெயரில் இருந்த ஜாதியை நடிகை ஜனனி நீக்கியிருப்பது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வரும் ஜனனி, இவ்வளவு நாட்கள் தன் பெயருக்குப் பின்னால் ஜாதியை வைத்து அடையாளப்படுத்திக் கொண்டார். திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடங்களிலும் ஜனனி ஐயர் என்றே குறிப்பிட்டிருந்தார். பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக்கொள்வது, காலங்காலமாக இருந்து வந்த குலப்பெருமையையும், ஜாதி மேட்டிமைத் தனத்தையும் காட்டுவதுபோல் இருக்கிறது. சமூகநீதியை குலைத்து, மனிதர்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்துவதின் அடையாளமாகவும் இருப்பதால், பெயருக்கு பின்னால் ஜாதியை போடக்கூடாது என தமிழக அரசியல் களம் கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

பெரியார் தொடங்கிய பிரச்சாரம் இன்றளவும் நீடித்திருப்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக்கொள்வது கிடையாது. அந்த வழக்கம் ஏறத்தாழ ஒழிந்துபோயுள்ளது என்றே கூறலாம். ஆனால், சினிமாவில் வரும் சில நட்சத்திரங்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடிகை ஜனனி ஐயரும் அவ்வாறே இவ்வளவு நாள் இருந்து வந்தார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதியை அகற்றி, ஜனனி என பெயரிட்டுள்ளார். மேலும், மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த மாற்றம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Also read... சாலையோரவாசிகளுக்கு உணவளிக்கும் ஷகிலா - குவியும் பாராட்டுகள்!

2010 ஆம் ஆண்டு நந்தினி ஜே.எஸ் இயக்கிய திரு திரு துரு படத்தில் முதன் முதலாக தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜனனி, 2011 ஆம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தில் நடித்து பலரும் அறியும் முகமாக மாறினார். இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் ஆர்யா, விஷால் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்திருந்தனர். திரைத்துறைக்கு வரும் முன்னர் மாடலிங் துறையில் இருந்தார். பல விளம்பரங்களில் நடித்த ஜனனி, தன்னுடைய அடுத்தடுத்த முயற்சிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக மாறினார். 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.

தாடி பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம், ஆனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த், ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரும் இந்த சீசனில் கலந்து கொண்டனர். அந்த சீசனில் தன்னுடைய துரு துரு பேச்சு மற்றும் செயல்களால் பலரின் கவனத்தை ஈர்த்தார். இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருந்த அவர், 4வது இடத்தைப் பெற்றார். முதல் இடத்தை ரித்விகாவும், 2ம் இடத்தை ஐஸ்வர்யா தத்தாவும், 3ம் இடத்தை விஜயலட்சுமி பெரோஸூம் பெற்றனர். தெகடி, அதே கண்கள் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஜனனி நடித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: