Sun Tv: ரோஜா சீரியலில் இனி இவர் தான் வில்லியா? - வெளியான புது தகவல்

ரோஜா சீரியல்

சமீபத்தில் தான் இந்த சீரியலின் டைமிங் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.

  • Share this:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரோஜா ரசிகர்களை கவர்ந்த முக்கியமான ஒரு சீரியல் ஆகும். இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். அனாதை இல்லத்தில் வளர்ந்த ரோஜா (பிரியங்கா நல்கார்) மற்றும் பணக்கார வீடு பையன் அர்ஜுன் (சிபு சூர்யன்) ஆகியோர் இடையே செய்யப்பட்ட ஓராண்டு ஒப்பந்த திருமணம், பின் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதல், இருவரும் உண்மையாக திருமண வாழ்வை துவக்கினர்.

தன்னை திருமணம் செய்து கொள்ள இருந்த அர்ஜுன் பல காரணங்களால் ரோஜாவை திருமணம் செய்து கொண்டதால் வில்லியாக மாறி விடுகிறார் பிரியா(ஷாமிலி). காதல், ரொமேன்ஸ், அதிரடி, ஆக்ஷன் என்று கலவையான திரைக்கதையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது இந்த சீரியல். தற்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஏராளமான சுவாரஸ்யங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் தான் இந்த சீரியலின் டைமிங் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. ஆயினும் ரசிகர்கள் அளித்து வரும் அமோக வரவேற்பால் டிஆர்பி ரேட்டிங் சற்றும் குறையாமல் இருக்கிறது. எனவே எகிறி இருக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்து சற்றும் குறைந்து விட கூடாது என்பதில் சீரியல் டீம் மிகுந்த கவனமாக உள்ளது. இதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் பல ட்விஸ்ட்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

Also read... Mahesh Babu: கொள்கைக்கு விரோதம்... பாதாள பைரவி ரீமேக்கை மறுத்த மகேஷ்பாபு!

கதைக்களத்தில் விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்த சீன்களை வைத்து தவறாமல் இந்த சீரியலை பார்க்க வேண்டும் என்ற ஆவலை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாக எபிசோட்களாக அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கோர்ட் சீன்கள் ஒளிபரப்பாகின. அதே போல ரோஜா தான் டைகர் மாணிக்கத்தின் (ராஜேஷ்) மகள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க பல வேலைகளை செய்து வந்தார் அர்ஜுன். ஆனால் அதையெல்லாம் பிரியா தனது தோழியின் உதவியுடன் ஆதாரத்தை கலைத்து விட்டார். இதனிடையே பிரியா கதாபாத்திரத்தை ஏற்று வில்லியாக நடித்து வரும் ஷாமிலி சுகுமார், தற்போது கர்ப்பமாக உள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இன்னும் நீடிக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார் ஷாமிலி. இந்நிலையில் ஷாமிலி இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறியதால் அவருக்கு பதில் வில்லி கேரக்டரில் நடிக்க போவது யார் என்ற எதிர்பாரு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நிலையில் இந்த சீரியலில் நடிகை ஷாமிலிக்கு முன் வில்லியாக நடித்து வந்த ஐஸ்வர்யா என்பவரே மீண்டும் இந்த கேரக்டரை ஏற்று நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: