Actress Hamsa Nandini Breast Cancer: எஸ்.எஸ்.ராஜமெளலியின் ’நான் ஈ’, அனுஷ்காவின் ’ருத்ரம்மா தேவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி, தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் ஈ. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழி வாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுக்கும் கற்பனை கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் ராஜமெளலி. இதில் நானி, சுதீப், சமந்தா உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. அதோடு அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி படத்தில் மடானிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தெலுங்கில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா, கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் இடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை மொட்டை தலையுடனான புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “4 மாதங்களுக்கு முன்பு என் மார்பில் சிறு கட்டி இருந்ததை உணர்ந்தேன். இனி என் வாழ்க்கை பழையபடி இருக்காது என்று அப்பொழுதே உணர்ந்தேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதில் இருந்து பயத்தில் இருட்டில் வாழ்ந்தேன்.
Also Read : பிக் பாஸ் போட்டியாளர் மறைவு? சர்ச்சையைக் கிளப்பிய ஜேம்ஸ் வசந்தன் பதிவு
பின்னர் நான் கிளினிக் சென்று கட்டியை செக் செய்துக் கொண்டேன். அதன் பின் surgical oncologist மூலமாக பயாப்ஸி செய்ய வேண்டும் என சொன்னார்கள். அப்போது தான் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மேலும், அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது.
No matter what life throws at me, no matter how unfair it may seem, I refuse to play the victim. I refuse to be ruled by fear, pessimism, and negativity. I refuse to quit. With courage and love, I will push forward. pic.twitter.com/GprpRWtksC
— Hamsa Nandini (@ihamsanandini) December 20, 2021
உடனே அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிவிட்டார்கள். ஆனால் அது அத்துடன் முடியவில்லை. BRCA1 (Hereditary Breast Cancer) என்பதால் என் வாழ்க்கை முழுவதும் புற்றுநோய் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்காக சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது.
இதையும் படிங்க - காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை - எஸ்.ஏ.சந்திரசேகர்
இதுவரை 9 முறை கீமோதெரபி செய்துவிட்டனர். இன்னும் 7 முறை செய்ய வேண்டியிருக்கிறது. நான் தைரியமாக இருந்து இந்த நோயை வெல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.