தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் இணைந்த குட்டி த்ரிஷா!

யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

  • Share this:
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடிகை கவுரி கிஷான் இணைந்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். தனுஷின் 41-வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

    அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ‘96’படத்தின் மூலம் பிரபலமான நடிகை கவுரி கிஷான் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில் தனுஷ் கையில் வாள் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.



    மேலும் படிக்க: ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பெயர் - வெளியான அப்டேட்!

    பார்க்க: தனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

    Published by:Sheik Hanifah
    First published: