ஆபாச வீடியோக்களை படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய நடிகை கைது!

நடிகை கெஹானா வசிஸ்த்

நடிகை கெஹானா வசிஸ்த் 87 ஆபாச வீடியோக்களை ஷூட்டிங் செய்து அதனை மொபைலிலும், கணிப்பொறியிலும் எடிட் செய்து பதிவேற்றியதற்கான ஆதாரங்களை காவல்துறையினரின் கண்டறிந்துள்ளனர்.

  • Share this:
ஆபாச வீடியோக்களை படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய புகாரில் நடிகை கெஹானா வசிஸ்த்தை மும்பையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வந்தனா திவாரி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை கெஹானா வசிஸ்த் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர். இவருக்கு வயது 32.

ஆசிய அழகிப் போட்டியில் மிஸ் ஆசியா பிகினி என்ற பட்டம் சூட்டப்பட்டவர் கெஹானா வசிஸ்த். மாடல் அழகியாக 80க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் Filmy Duniya என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு பட உலகில் நுழைந்து சில படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை 19 படங்களில் நடித்திருக்கிறார். Gandi Baat உட்பட பல வெப் தொடர்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் வெளியான பேய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பையின் மலாத் பகுதியில் உள்ள மாத் தீவில் இருக்கும் பங்களாவில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு ஆபாச வீடியோ எடுப்பது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர். இதில் நடிகை கெஹானா வசிஸ்த்துக்கும் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை நேரில் வரவழைத்து விசாரித்த நிலையில் முடிவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச வீடியோக்கள் எடுத்து அவற்றை தனது இணையதளத்தில் பதிவு ஏற்றி வந்தது தெரியவந்தது, இந்த இணையதளத்தில் இணைவோர் சந்தாவாக 2,000 ரூபாய் செலுத்தி ஆபாச வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்.

நடிகை கெஹானா வசிஸ்த் 87 ஆபாச வீடியோக்களை ஷூட்டிங் செய்து அதனை மொபைலிலும், கணிப்பொறியிலும் எடிட் செய்து பதிவேற்றியதற்கான ஆதாரங்களை காவல்துறையினரின் கண்டறிந்துள்ளனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நடிகைகள், துணை நடிகைகள், மாடல்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்த தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து விசாரணை நீண்டுள்ளது. நடிகை கெஹானா வசிஸ்த்தின் கைதையடுத்து 3 பெண்கள் தாங்கள் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களில் நடிக்க வைக்கப்பட்டதாக கெஹானா வசிஸ்த் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை ஆபாச வீடியோவில் நடித்த ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வங்கிக் கணக்கில் இணையதள சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வசூல் செய்யப்பட்ட 36 லட்ச ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டு, அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Published by:Arun
First published: