பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் நெகட்டிவ் பப்ளிஷிட்டி மூலம் பேசு பொருளானது. அதேவேளையில் படத்தை இயக்கி தயாரித்த மோகன்.ஜி.க்கு லாபத்தை பெற்றுக் கொடுத்தது ‘திரௌபதி’.
இதையடுத்து மோகன் ஜி இயக்கும் அடுத்த படம் குறித்த அக்டோபர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ர தாண்டவம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீண்டும் ‘திரெளபதி’ பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’, உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் விஜய் டிவியின் குக்வித் கோமாளி 2 நிகழ்ச்சி என சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் தர்ஷா ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தர்ஷாவை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் போட்டோக்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
சின்னத்திரை நாயகி தர்ஷா வெள்ளித்திரையிலும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ருத்ரதாண்டவம் திரைப்படம் 2021-ம் ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.