Home /News /entertainment /

தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு... அட்லீ மீது துணை நடிகை போலீசில் புகார்

தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு... அட்லீ மீது துணை நடிகை போலீசில் புகார்

தெலுங்கில் முதல் முறையாக படம் இயக்கும் அட்லி

தெலுங்கில் முதல் முறையாக படம் இயக்கும் அட்லி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் செய்ததாக இயக்குநர் அட்லீ மீது துணை நடிகை கிருஷ்ணா தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி தளபதி 63 படத்தின் முலம் இணைந்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

    படிக்க... கதை தன்னுடையது என்று ’தளபதி 63’ படத்துக்கு தடை கேட்டு குறும்பட இயக்குநர் வழக்கு!

    படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.



    அந்த புகார் மனுவில்,  "ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

    படப்பிடிப்பின் போது சுத்தமில்லாத உணவு வழங்கப்பட்டதால் அதை தட்டிக்கேட்ட தன்னை அட்லீ முன்னிலையில் உதவி இயக்குநர் தாக்கியதாகவும் கிருஷ்ணா தேவி தெரிவித்துள்ளார்.

    வீடியோ பார்க்க: ராங்கியாக மாறும் நடிகை த்ரிஷா!



    வீடியோ பார்க்க: ஐபிஎல் போட்டியின்போது ரசிகருக்கு தொல்லை கொடுத்த பிரபல டிவி நடிகை!






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director Atlee, Thalapathy 63

    அடுத்த செய்தி