ACTRESS CHITRAS HUSBAND HEMNATH WAS TAKEN AWAY FOR ENQUIRY TODAY IN CHENNAI CRIME INVESTIGATION VAI
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்..
விசாரணைக்கு சென்ற நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்
பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்கு வேனில்கொண்டு செல்லப்பட்டார்.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைசிறையில் கடந்த 14 ஆம் தேதி அடைத்தனர் . சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவரது நண்பர்கள் உறவினர்களிடம் பல கட்ட விசாரணை நடைபெற்றது .
இந்த நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணைக்காக பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட கணவர் ஹேம்நாத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிறைத் துறையினருக்கு ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்
ஆயுதப்படை ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர்
ஆதிராஜன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரி கிளை சிறைக்கு இன்று அதிகாலை வந்தனர்.
பின்னர் பொன்னேரி கிளை சிறை அதிகாரிகளிடம் அழைத்துச் செல்வதற்கான கடவுச்சீட்டை வழங்கி சிறையிலிருந்து ஹேம்நாத்தை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் அழைத்துச் சென்றனர். அங்கே விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
ஸ்ரீபெரும்புதூரில் கோட்டாட்சியரின் இந்த விசாரணைக்குப் பின்னர், ஹேம்நாத் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.