ஒருசில நபர்களால் சித்ராவுக்கு மிரட்டல் வந்திருக்கலாம் - மாமனார் பகீர் புகார்

ஒருசில நபர்களால் சித்ராவுக்கு மிரட்டல் வந்திருக்கலாம் - மாமனார் பகீர் புகார்

சித்ரா - ஹேம்நாத்

ஒருசில நபர்களால் சித்ராவுக்கு மிரட்டல் வந்திருக்கலாம் - மாமனார் பகீர் புகார்

  • Share this:
கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதிகாலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை செய்து அவர் தான் தற்கொலைக்குத் துாண்டியதாகக் கூறி கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சித்ராவை நடிக்கக் கூடாது என்றும், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டும் ஹேம்நாத் சண்டையிட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. சித்ராவின் தாயாரும் ஹேம்நாத் தான் தனது மகள் தற்கொலைக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக தங்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாகவும் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களிலும் விசாரணை நடத்தவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிசந்திரன் இன்று புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் சில நபர்களால் சித்ராவுக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, “சித்ரா என்பவர் தற்பொழுது டிஆர்பி ரேட்டிங் என்ற முறையில் சின்னத்திரை வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகை என்பதும் அவர் நடிப்பு மட்டுமின்றி விளம்பரம், பெரிய கடை, மகால்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒரு சில சினிமாவில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவராகவும் உள்ளார். அதைத் தெரிந்து தான் நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். நடிப்பில் பல நபர்களுடன் சேர்ந்து மற்றும் அரவனைப்பாக நடிக்கிறார் என்பது தெரிந்து தான் திருமணத்திற்கு நானும் என் மகனும் சம்மதம் தெரிவித்தோம். ஆகையால் அதனடிப்படையில் எந்தவிதமான சண்டைகளும் வந்ததில்லை.

மேலும் சித்ரா பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல நபர்களுடன் தினமும் தொலைபேசியில் பேசி வருவார் நாங்களும் தொழில் சம்பந்தமாக என்று இருந்து விடுவோம். அதில் தலையிட மாட்டோம். ஆனால் அவர் கடந்த ஆண்டு சென்னை திருவான்மியூரில் சுமார் ஒன்றரை கோடிக்கு வீடு வாங்கியதாகவும், சுமார் 1 கோடிக்கு ஆடி கார் வாங்கியதாகவும் அதற்கான முதலீடுகள் அவருக்கு தெரிந்த நபர்கள் உதவியதாகவும் மீதமுள்ள தொகையினை மாத தவணையாக அடைத்தும் வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு பல பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எல்லாம் தெரியும் என்பதாலேயே திருமணம் மிக பிரமாண்டமாக நடத்த சித்ரா முடிவு செய்தார் என்பது தெரியும்.

ஆனால் தற்பொழுது தான் எனக்கு பல சமூகவலைதளங்கள் மூலமாக வெளிவந்த தகவல்கள் மூலம் சித்ரா ஏற்கெனவே மூன்று ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் சித்ரா மதுப்பழக்கத்துக்கு உள்ளானவர் என்றும், விஜய் டிவியில் உள்ள தொகுப்பாளர் ரக்‌ஷன் என்பவர் டேட்டிங்கில் எடுத்த நெருக்கமான புகைப்படத்தினை வைத்துக் கொண்டு மிரட்டியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் முக்கிய அரசியல்வாதியுடன் தினமும் தொலைபேசியில் அவர் பேசியதாகவும் திருமணம் செய்தால் பல ஆதாரங்களைக் கொடுத்து திருமணத்தை தடை செய்து அசிங்கப்படுத்துவதாகவும் மிரட்டியதாகவும் தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பார்ப்பதினால் எனக்கும் சித்ரா கடந்த மாதம் என்னிடம் சில கடன்களை உடனடியாக அடைத்துவிட்டு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

அதாவது சித்ரா சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை மற்றும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதனால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள், சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். தற்பொழுது திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறைய தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்களால் மிரட்டல் வந்திருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில சமூகவலைதளத்தில் சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவு கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆகையால் அது சம்பந்தமாகவும் எனக்கு சந்தேகம் வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில தொலைபேசி எண்கள் வந்தால் பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் கூறினார். சித்ராவின் தொலைபேசியில் தொடர்ந்து யாரெல்லாம் பேசியுள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்து அதனடிப்படையில் சித்ரா திருமணம் செய்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி மிரட்டிய நபர்களையும் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, சமூகவலைதளங்களில் பல தகவல்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வருவதினால் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று விட்டு விட முட்டியவில்லை. ஆகையால் அதன சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராகிய தங்களுடைய விசாரணையில் எந்த விதத்திலும் தலையீடும் செய்யக் கூடாது என்று தெரிந்தமையில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களையும் என்னுடைய கருத்துகளையும் தங்களிடம் புகார் மூலம் சமர்பிக்கிறேன்” இவ்வாறு ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: