மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் ரவி , தாயார் விஜயா என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தம் முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படப்படிப்பு தளத்திற்கு சென்று ஹேமந்த் ரவி, சித்ராவிடம் ஏற்கனவே சண்டையிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹேமந்த் குடித்துவிட்டு அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ராவின் தாயார் விஜயா , ஹேமந்த்தை பிரிந்து வர சொல்லி தொடர்ந்து கூறி வந்ததாலும் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் , சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியிடம் காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரது கணவர் ஹேமந்த் ரவியும் இருந்துள்ளார். இதனால், இது கொலையா, தர்கொலையா என உறவினர்கள், ரசிகர்கள் என பலதரப்பும் சந்தேகம் எழுப்பியிருந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை முடிவில், தற்கொலை செய்துகொண்டது உறுதி ஆகியுள்ளது.
சித்ராவின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும், அவரின் உயிரிழப்புக்கு ஹேமந்த்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். அதேசமயம், தங்கள் தரப்பில் எந்த குற்றமும் இல்லை என்று ஹேமந்த்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், நடிகை சித்ராவின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
படிக்க: நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் - புகைப்படங்கள்
படிக்க: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியானது - முரண்பட்ட தகவல்களால் குழப்பம்
படிக்க: ’காதலர் நல்லவரா கெட்டவரா என சித்ரா பார்க்கவில்லை' - தோழி ரேகா நாயர்
படிக்க: நடிகை சித்ரா மரணம் தற்கொலையே - பிரேத பரிசோதனையில் உறுதி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.