’நடத்தையில் சந்தேகம்’.. ’இனி நடிக்கக்கூடாது’ என வாக்குவாதம் - சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் குறித்து சிக்கிய ஆதாரங்கள் என்ன?

ஹேமந்த் ரவியுடன் சித்ரா

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி அதிகாலை தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

  இந்நிலையில் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தல் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சித்ராவுக்கு அவர் கணவரின் குடும்பத்தின் தரப்பில் வரதட்சணை கொடுமை போன்று ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

  விசாரணை முடிந்து வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகளின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம்சாட்டினார். அதேவேளையில், தனக்கும், சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இருந்ததில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க : நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது.

  தற்போது விசாரணையில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, ”சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சித்ராவுடன் சண்டையிட்டு போலீசார் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
  மேலும், ஹேம்நாத் அடிக்கடி சண்டையிடுவது குறித்து சித்ரா , ஹேம்நாத் தந்தையிடம் செல்போனில் தெரிவித்த ஆதாரம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது எனவும், தற்கொலை நடந்த இரவு அறையில் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளதாக” காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

  முன்னதாக ஈவிபி படபிடிப்பு தளத்தில் ஹேம்நாத் சித்ராவிடன் சென்று அங்கேயே சண்டையிட்டதும் இனி சின்னத்திரை ,வெள்ளித்திரை போன்ற சினிமாவில் நடிக்க கூடாது என்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என சித்ராவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து இருவரும் ஒன்றாக காரில் சென்று தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அறையில்
  தற்கொலை நடந்த இரவு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளதாக காவல்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.இன்று காலை சித்ராவின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஒ திவ்யஸ்ரீ விசாரனை நடத்திய நிலையில் ஹேம்நாத் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: