கணவருடன் நடிகை சாந்தினி வெளியிட்ட முதல் வீடியோ

கணவருடன் நடிகை சாந்தினி வெளியிட்ட முதல் வீடியோ

நடிகை சாந்தினி

எல்லோரும் கேட்டுக் கொண்டதால் தனது கணவருடன் ரீல் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை சாந்தினி.

  • Share this:
திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். நடிகைகள் பலரும் அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, படம் குறித்த அறிவிப்புகளை பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை சாந்தினி தனது கணவருடன் எடுத்த ரீல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எல்லோரும் கேட்டுக் கொண்டதற்காக தன்னுடைய கணவருடன் எடுத்த முதல் ரீல் வீடியோவை பதிவிடுவதாகவும் அவர் எழுதியுள்ளார். சாந்தினியின் இந்த பதிவைப் பார்த்த பலரும் அற்புதமான ஜோடி என்று பாராட்டி வருகின்றனர். 
View this post on Instagram

 

A post shared by CHANDINI (@chandiniofficial)


கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் இரட்டை ரோஜா, தாழம்பூ ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இருவீட்டார் சம்மதப்படி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் பொம்மை படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: