ஆட்டோ ஓட்டும் பாபநாசம் பட நடிகை ஆஷா சரத்...!

நடிகை ஆஷா சரத்

காமெடி கலந்த டோண்ட் கேர் நபராக ஜலஜா கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாகவும், படத்தின் முக்கிய திருப்பங்களை உருவாக்கும் கேரக்டராக இது இருக்கும் எனவும் அறிமுக இயக்குனர் சேன்ஃபீர் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மலையாளத்தில் உருவாகியுள்ள பீஸ் என்கிற படத்தில் நடிகை ஆஷா சரத் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார்.

த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்களில் உயர் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் ஆஷா சரத். கமலின் பாபநாசம், தூங்காவனம் படங்களிலும் நடித்துள்ளார். பீஸ் (அமைதி) மலையாளப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் தோன்றுகிறார்.

பீஸ் படத்தில் ஜோஜு ஜார்ஜ் (ஜோசப் படத்தின் ஹீரோ) நாயகனாக நடிக்கிறார். கார்லோஸ் என்ற வித்தியாசமான வேடம் இவருக்கு. ஆஷா சரத் இதில் ஜலஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜலஜா திருமணத்தில் நம்பிக்கையில்லாதவர். அதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டிலே ஊணு (வீட்டு சாப்பாடு) என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். விசேஷங்களுக்கு சமைத்து தருவதும் உண்டு. அப்படியான நேரங்களில் ஜலஜாவே ஆட்டோவில் உணவுகளை எடுத்துச் செல்வார். அதாவது ஜலஜாவாக நடிக்கும் ஆஷா சரத் பல காட்சிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்.

Also read... மாநாடு படம் த்ரில்லிங், மாஸ் என்டர்டெயினர் - தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

நாயகிகள் ஆட்டோ ஓட்டுனர்களாக நடிப்பது மலையாளத்தில் புதிதல்ல. சோட்டா மும்பை படத்தில் நடிகை பாவனா ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். ஆட்டோர்ஷா படத்தில் அனுஸ்ரீ ஆட்டோ டிரைவராக நடித்தார். இப்போது ஆஷா சரத்.

காமெடி கலந்த டோண்ட் கேர் நபராக ஜலஜா கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாகவும், படத்தின் முக்கிய திருப்பங்களை உருவாக்கும் கேரக்டராக இது இருக்கும் எனவும் அறிமுக இயக்குனர் சேன்ஃபீர் குறிப்பிட்டுள்ளார்ரம்யா நம்பீசன், சித்திக், மம்முக்கோயா உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: