• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆபாச கமெண்ட் அடித்த நபரை போலீஸ் ஸ்டேஷன் வரவைத்து மன்னித்து அனுப்பிய நடிகை

ஆபாச கமெண்ட் அடித்த நபரை போலீஸ் ஸ்டேஷன் வரவைத்து மன்னித்து அனுப்பிய நடிகை

Youtube Video

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் தனக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்நிலையத்திற்கு வர வைத்து மன்னித்து அனுப்பியுள்ளார்.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நடிகைகள் தங்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அப்படி உரையாடிய நடிகை நிலா, ஜூனியர் என்டிஆர் ரசிர்களின் தொல்லைக்கு ஆளாகி ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதே போல் மற்றுமொரு சம்பவம் கேரளாவில் நடந்தள்ளது.

    தமிழில் 'எதுவும் நடக்கும்' என்ற படத்தில் கார்த்திக் குமார் ஜோடியாக நடித்தவர். மலையாள நடிகை அபர்ணா நாயர். மலையாளத்தில் மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி பேஸ்புக், இன்ஸ்டாவில் தனது கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம்.

    சிலர் அவர் அழகை வர்ணிப்பதும் உண்டு. சிலர் எல்லை மீறி ஆபாசமாக வர்ணிக்கவும் தொடங்கி விடுவர். இந்நிலையில், இவரது பக்கத்தில் ஒரு நெட்டிசன் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசமான அபர்ணா, அவரது பெயர், பேஸ்புக் பக்கம் மற்றும் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களைக் குறிப்பிட்டு, ஆவேசமாகச் சாடியிருந்தார்.

    இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு, தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளமல்ல, இது என காட்டமாக தெரிவித்திருந்தார். மேலும், நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துகளை புறக்கணிக்கப் போகிறேன் என்றோ நினைத்தால், அது தவறானது. இதுபோன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள, நான் இங்கு இல்லை. நான் எனது பணியை விளம்பரப்படுத்த இங்கு இருக்கிறேன். உங்களுக்கு 30 விநாடி சந்தோஷத்தை கொடுப்பதற்கு அல்ல” என்று காட்டமாக அபர்ணா நாயர் கூறி இருந்தார்.

    பின்னர் நெட்டிசனின் எல்லை மீறல் குறித்து கேரள சைபர்கிரைமில் புகார் செய்திருந்தார். அபர்ணாவின் புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபரை பிடித்தனர். பின்னர் அபர்ணாவை வரவைத்து அவரது முன்னிலையில் விசாரணை நடத்தினர். அப்போது ஆபாச கருத்துக்களை பதிவிட்டது குறித்து அவரிடம், அபர்ணா நாயர் சரிமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நெட்டிசன் மன்னிப்புக் கேட்டதை அடுத்து, அவருடைய குடும்பச் சூழலை அறிந்து எழுதி வாங்கிக்கொண்டு, புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.



    இதையடுத்து நடிகை அபர்ணாவின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சிலர் அப்படி விட்டிருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். எல்லை மீறி கமெண்ட் போட்டால் போலீசாரில் பிடியிலிருந்து தப்ப முடியது என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: