Anushka Shetty: புதிய படங்களில்லை... ஸ்டேன்ட் அப் காமெடியனுக்கு ஜோடியாகும் அனுஷ்கா?

அனுஷ்கா ஷெட்டி.

நவீன் பாலிஷெட்டி அடிப்படையில் ஸ்டேன்ட் - அப் காமெடியன். 2012 இல் சினிமாவுக்கு வந்தாலும் 2019 இல் வெளியான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' திரைப்படத்தில்தான் ஹீரோவானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்ட அனுஷ்கா, பாகுபலிக்குப் பிறகு இன்னும் உயரத்தை தொடுவார் என நினைத்தனர். ஆனால், திரைப்படங்களில் அவரைப் பார்ப்பதே அரிதானது. சமீபத்தில் வெளியான அவரது புகைப்படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியாயினர். அந்தளவு குண்டாகியிருந்தார். நாயகிக்குரிய உடற்கட்டை இழந்ததாலா தெரியவில்லை, புதிய படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. இந்நிலையில், ஸ்டேன்ட் அப் காமெடியனாக இருந்து ஹீரோவான நவீன் பாலிஷெட்டியின் படத்தில் அனுஷ்கா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

நவீன் பாலிஷெட்டி அடிப்படையில் ஸ்டேன்ட் - அப் காமெடியன். 2012 இல் சினிமாவுக்கு வந்தாலும் 2019 இல் வெளியான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' திரைப்படத்தில்தான் ஹீரோவானார். நகைச்சுவை கலந்த துப்பறியும் படமான அது நல்ல வரவேற்பை பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து 2021 இல் வெளியான நகைச்சுவை படம் 'ஜதி ரத்னலு' மிகப்பெரிய வெற்றி பெற்று நவீன் பாலிஷெட்டியை ஸ்டாராக்கியது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை மொய்க்க ஆரம்பித்தனர்

Also read... வாழ்வின் பயணத்தை பற்றிய திரைப்படம் - புதிய படம் குறித்து கிருத்திகா விளக்கம்!

நவீன் அடுத்து மகேஷ் இயக்கத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது 40 வயது பெண்ணிற்கும், அவளைவிட வயதில் குறைந்த இளைஞனுக்குமான காதல் கதையாம்.

இதில் நாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் கால்ஷீட் தர தயாராக இருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனயுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: