ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எதிர்பாராத சினிமா வாழ்க்கை.. கேமரா பயம்.. சினி வாழ்க்கை குறித்து மனம் திறந்த அனுஷ்கா!

எதிர்பாராத சினிமா வாழ்க்கை.. கேமரா பயம்.. சினி வாழ்க்கை குறித்து மனம் திறந்த அனுஷ்கா!

அனுஷ்கா

அனுஷ்கா

Anushka Shetty | யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகை அனுஷ்காவின் 48-வது படத்தை பி. மகேஷ்பாபு இயக்குகிறார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார்.

நடிகை அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. இதனையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில் ''நான் 17 ஆண்டுகளாக நடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய பேர் இதை நீண்ட பயணம் என்கின்றனர். ஆனால் இது மிகச் சிறியது. நன்றாக உழைத்தால்தான் கதாநாயகிகள் சினிமா துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கையோடுதான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தேன். மற்றவர்கள் போல் நானும் எதிர்பாராமல் சினிமாவிற்கு வந்தேன். எனக்கு சினிமாவைப் பற்றிய எந்த புரிதலும் இல்லை.முதல் முறை கேமரா முன் நின்றபோது பயந்தேன்.

எனக்கு அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும், இந்த கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பட்டியல் போட்டு பழக்கமில்லை. நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டேன். நான் இத்தனை படங்களில் நடித்தாலும் 'அருந்ததி' படம் தான் நம்பர் ஒன். எந்த நடிகையாக இருந்தாலும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவால்தான். நான் ஒரு யோகா டீச்சர் ஆக வேலை செய்தேன் என்பது நிறைய பேருக்கு தெரியும். அதற்கு முன்பு ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.

சமீப காலமாக எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகை அனுஷ்காவின் 48-வது படத்தை பி. மகேஷ்பாபு இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நிவின் பாலிஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புதிய படத்தின் போஸ்டரை பிறந்தநாள் வாழ்த்தோடு படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Actress Anushka, Entertainment, Tamil News