கண்ணான கண்ணே சீரியலில் இணைந்த பிரபல நடிகை

கண்ணான கண்ணே சீரியலில் இணைந்த பிரபல நடிகை

கண்ணான கண்ணே தொடர் நடிகர்கள்

கண்ணான கண்ணே தொடரில் பிரபல நடிகை அனுராதா இணைந்துள்ளார்.

  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கண்ணான கண்ணே. தெலுங்கில் பௌர்ணமி என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் கண்ணான கண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் சன் டிவியில் சில சீரியல்களுக்கு திடீர் என்ட் கார்டு போடப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் பப்லூ (கவுதம்) தொழிலதிபராக நடிக்கும் இத்தொடரில் அவரது மகள்களாக மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகா ராதா கிருஷ்ணனும், அக்‌ஷிதா ரேவதி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நடிகர் ராகுல் ரவி, நித்யா தாஸ் உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் தனது முதல் மகளான மீரா பிறந்த போது மனைவி இறந்ததால் அவரை ஆரம்பித்திலிருந்தே வெறுத்து ஒதுக்குகிறார் தொழிலதிபர் கவுதம் (பப்லூ) கதைப்படி மீராவின் பாட்டியிடம் அவரை ஒப்படைத்துவிட முடிவெடுக்கும் கவுதம் பாட்டி வீட்டுக்கு குடும்பத்துடன் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு வசிக்கும் மீராவின் பாட்டியாக பிரபல நடிகை அனுராதா இத்தொடரில் புதிதாக இணைந்துள்ளார்.ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்களில் நடித்திருக்கும் அனுராதா, ‘தங்கம்’, ‘முத்தாரம்’, ‘அக்னி நட்சத்திரம்’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது ‘கண்ணான கண்ணே’ தொடரில் அனுராதா இணைந்திருப்பதால் கதையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: