ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என் அம்மா அழுதுட்டாங்க.. காதல் விவகாரம் குறித்து மனம் திறந்த அனு இம்மானுவேல்!

என் அம்மா அழுதுட்டாங்க.. காதல் விவகாரம் குறித்து மனம் திறந்த அனு இம்மானுவேல்!

அனு இம்மானுவேல்

அனு இம்மானுவேல்

Anu Emmanuel | பிரபல தெலுங்கு நடிகரை நடிகை அனு இம்மானுவேல் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சுவப்னா சஞ்சரி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனு இமானுவேல் பிறகு 2016 ஆம் ஆண்டு நிவின் பாலி நாயகனாக நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமாகினார் அனு இம்மானுவேல். அதன் பிறகு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் முலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனு இமானுவேல். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திக்கேயனுடன் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் அனு இமானுவேல் பிரபல தெலுங்கு நடிகரின் தம்பியுடன் டேட்டிங் செல்வதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனின் தம்பியும் பிரபல நடிகருமான அல்லு ஷிரிஷை தான் அனு இமானுவேல் டேட்டிங் செய்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை இம்மானுவேல். அதில் ஊர்வசிவோ ராக்ஷசிவோ படத்திற்கு முன்பு வரை எனக்கு அல்லு ஷிரிஷை தெரியாது. படத்தின் பூஜை அன்று மற்றுமே அவரை நான் சந்தித்தேன். மேலும் இப்படத்தின் கதாபாத்திரம் பற்றி இருவரும் காஃபி ஷாப்பில் சந்தித்து பேசினோம். அந்த போட்டோக்கள் தான் இணையத்தில் வெளியாகி நாங்கள் காதலிப்பதாகவும் வதந்தி பரவியது. அந்த வதந்தியை பார்த்து எனது அம்மா அழுதுவிட்டார். என் அம்மாவின் வேதனையை பார்த்து நான் வருந்தினேன்.

இந்த காலத்தில் கூட ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து காபி குடித்தால் கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தியை பரப்பி விடுகிறார்கள். மேலும் நான் இன்னும் சிங்கிளாக தான் உள்ளேன், நான் யாரையும் காதலிக்கவும் இல்லை, யாருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அனு.

Also Read : புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரபல நடிகை மீண்டும் உயிருக்கும் போராடும் சோகம்

தெலுங்கில் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநரை காதலிப்பதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Actress, Anu Immanuel, Tamil News