முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இணையும் ஆன்ட்ரியா!

மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இணையும் ஆன்ட்ரியா!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை ஆன்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆன்ட்ரியா தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார்.

வடசென்னை படத்தின் போது ஆன்ட்ரியாவுடன் ஏற்பட்ட நட்பால் இந்தப் படத்தை தயாரிக்க வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்குச் செல்ல முடிவெடுத்திருந்த படக்குழு கொரோனா அச்சத்தால் தள்ளி வைத்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அசுரன் பட வெற்றியை அடுத்து சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பணிகளையும், சூர்யாவின் வாடிவாசல் பட வேலைகளையும் மும்முரமாக கவனித்து வரும் வெற்றிமாறன், இந்த 2 படங்களுக்கிடையா ஆன்ட்ரியாவின் புதிய படத்தை தயாரிக்க முடிவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஊரடங்கு உத்தரவு பதிவில் அநாகரிகமான கமெண்ட் - மஞ்சிமா மோகன் பதில்

First published:

Tags: Andrea Jeremiah, Director vetrimaran