Andrea Jeremiah: கல்லூரிக்குப் போகணும்.. நடிகை ஆண்ட்ரியாவின் திடீர் ஆசை

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தனது பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ’மீண்டும் கல்லூரிக்கு போகணும்’ என்று கூறியுள்ளார்.

  • Share this:
    நடிகை ஆண்ட்ரியா 2005 ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக  அறிமுகமானார்.அதையடுத்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    ஆண்ட்ரியா நடிப்பில் கடைசியாக மாஸ்டர் வெளியானது. அவரது திறமையுடன் ஒப்பிட்டால் யானைப் பசிக்கு சோளப்பொரி. அவர் நடித்தது மிகச்சிறிய வேடம். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருப்பவர், பழைய புகைப்படங்களைப் பார்த்திருப்பார் போல. ஒருபோதும் நிறைவேறாத ஆசை ஒன்றை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.

    ஆண்ட்ரியா கல்லூரியில் படிக்கையில் எடுத்த இளவயது போட்டோவை பகிர்ந்திருக்கிறார், "நான் கல்லூரியில் படித்த போது, வளர்ந்த பெண்ணாக வேண்டும் என ஆசைப்பட்டேன். இப்போது நான் பெரிய பெண்ணாகிவிட்டேன். ஆனாலும், சுதந்திரமான கல்லூரி மாணவியாக மீண்டும் கல்லூரிக்கு போக விரும்புகிறேன்" என கூறியுள்ளார்

     



    பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆன்ட்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு சுற்று வந்துவிட்டார். தற்போது அவர் நடிப்பில் அரண்மனை 3, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு 2 என பல படங்கள் உள்ளன. இதில் சில முடிவடைந்தவை. சில தயாரிப்பில் இருப்பவை. சில நாயகி மையப் படங்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், ஆண்ட்ரியாவின் அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக வெளியாக வாய்ப்புள்ளது. புதிய படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.



    ஆன்ட்ரியா டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட படத்தை தேர்வு செய்தால், அவரது கல்லூரி ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: