முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 22 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் ரியல் ஜோடி!

22 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் ரியல் ஜோடி!

சரத்குமார் மற்றும் ராதிகா

சரத்குமார் மற்றும் ராதிகா

சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இயக்குநர் தனசேகரன் தனித் தனியாக கதை சொல்லியுள்ளார். கதை பிடித்துப்போக இருவரும் உடனே நடிக்க சம்மதித்துள்ளனர்.

  • Last Updated :

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர்.

சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந்தாலும் சூர்ய வம்சம் படத்திற்குப் பின் இருவரும் ஜோடி சேரவில்லை.

இந்நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின் இந்த ரியல் ஜோடி மீண்டும் திரையில் ஜோடியாக களமிறங்க உள்ளது.

Also read... தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவுக்கு சினிமாவில் சம்பாதிக்கவில்லை - கொந்தளிக்கும் வாரிசு நடிகை

'வானம் கொட்டட்டும்' என்ற இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர்  தனசேகரன் இயக்குகிறார். மணிரத்திரனத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

Also read... ”கட்சி, கூட்டணிக்காக அல்ல... நட்புக்காக வந்துள்ளேன்” - சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக சமுத்திரகனி பிரசாரம்

இந்நிலையில், சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இயக்குநர் தனசேகரன் தனித் தனியாக கதை சொல்லியுள்ளார். கதை பிடித்துப்போக இருவரும் உடனே நடிக்க சம்மதித்துள்ளனர்.

Also see... 


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Actress Aishwarya, Actress Madonna Sebastian, Radhika sarathkumar, Sarathkumar, Vikram Prabhu