ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுத்த சூப்பர் ஸ்டார் இவரா?... ட்விட்டரில் வைரலான செய்தி

அடுத்த சூப்பர் ஸ்டார் இவரா?... ட்விட்டரில் வைரலான செய்தி

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

மான்ஸ்டர் படம் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டேன் என்று எஸ்.ஜே.சூர்யா சொன்னதாக செய்திகள் பரவியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சூப்பர் ஸ்டார் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டதாக வெளியான தகவலுக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மான்ஸ்டர்.

`ஒரு நாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், மான்ஸ்டர் படம் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டேன் என்று எஸ்.ஜே.சூர்யா சொன்னதாக செய்திகள் பரவியது.

இந்த செய்திக்கு எஸ்.ஜே,சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் அப்படி சொல்லவே இல்லையே. மான்ஸ்டர் வெற்றிக்கு நன்றி மட்டும் தான் சொன்னேன். யாருப்பா கிளப்பிவிடுறது’ என்று பதிவிட்டுள்ளார்

Also watch

First published:

Tags: S.J.Surya